மேலும் செய்திகள்
விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை
6 hour(s) ago
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
6 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
9 hour(s) ago
கள்ளக்குறிச்சி: குதிரைச்சந்தல் கிராமத்தில் நடந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட காளை மாடுகளை இளைஞர்கள் அடக்கினர்.கள்ளக்குறிச்சி அடுத்த குதிரைச்சந்தல் கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி மஞ்சு விரட்டு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நேற்று நடந்தது. இதையொட்டி பிள்ளையார் கோவிலுக்கு எதிரே வாடிவாசல் அமைக்கப்பட்டது. போட்டியில் பங்கேற்கும் காளையின் கழுத்தில் வடம் கயிறு கட்டப்பட்டது. இளைஞர்கள் வடக்கயிற்றினை இழுத்து பிடித்தவாறு காளை மாட்டினை ஊரை சுற்றி வாடிவாசல் பகுதிக்கு அழைத்து வந்தனர்.அங்கு இளைஞர்கள் ஒன்று சேர்ந்து காளைமாட்டினை அடக்கினர். வெற்றி பெற்ற இளைஞர்களுக்கும், காளை மாட்டின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. 50க்கும் மேற்பட்ட காளைகள் போட்டியில் பங்கேற்றன. தொடர்ந்து விளையாட்டு போட்டிகள், பொங்கல் வைத்து படையலிடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.
6 hour(s) ago
6 hour(s) ago
9 hour(s) ago