உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  அரசு பள்ளியில் தற்காப்பு கலை பயிற்சி

 அரசு பள்ளியில் தற்காப்பு கலை பயிற்சி

சங்கராபுரம்: அரசு நடுநிலைப் பள்ளிகளில் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி நிறைவு விழா நடந்தது. அரசம்பட்டு அரசு நடுநிலைப் பள்ளிகளில் 6 முதல் 8 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் மாணவிகள் தங்களை பாதுகாத்து கொள்ள தேவையான பல்வேறு தற்காப்பு நடைமுறைகள் கற்றுக் கொண்டனர். நேற்று பயிற்சி நிறைவு விழா நடந்தது. நிகழ்ச்சியில் மாணவிகள் தற்காப்பு குறித்த செயல்விளக்கம் அளித்தனர். பள்ளி தலைமையாசிரியர்கள் அரசம்பட்டு ராஜா, கொசப்பாடி சண்முகநாதன், செம்பராம்பட்டு முனியப்பிள்ளை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு பயிற்சியாளர் சூரியமூர்த்தி பதக்கம் மற்றும் கோப்பை வழங்கி பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ