பால் குட ஊர்வலம்
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள பொருவளூர் எம்.ஜி.ஆர்., நகர் நரிக்குறவர் காலனியில் உள்ள ஆதிமுத்து மாரியம்மனுக்கு பால் கூட ஊர்வலம் நடந்தது. ஆதி முத்து மாரியம்மனுக்கு ஆடி மாதம் முதல் செவ்வாய்க்கிழமை, சாகை வார்த்தல் நடைபெறும். அதற்கு முன்னதாக நேற்று 108 பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. பொரசப்பட்டு சாலையில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிப்பட்டனர். அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து சுவாமி வீதி உலா நடந்தது. இன்று மாலை தீமிதி உற்சவம் நடக்கிறது.