பங்காரம் லட்சுமி கல்லுாரியில் நவீன கணினி ஆய்வகம் திறப்பு
கள்ளக்குறிச்சி; பங்காரம் லட்சுமி கல்லுாரியில் நவீன கணினி ஆய்வகம் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு, கல்லுாரி தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் முருகப்பன், இயக்குநர் சரவணன், பொருளாளர் சாந்தி, ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் பழனியம்மாள், துணை முதல்வர் சக்திவேல் மற்றும் அனைத்து துறை தலைவர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து கல்லுாரியில் நவீன மயமாக்கப்பட்ட கணினி ஆய்வகத்தை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தனர். கணினி அறிவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல் துறை மாணவர்கள் பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியை துறை பேராசிரியர்கள் ஒருங்கிணைத்தனர்.