உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / நாட்டு நலப்பணி திட்ட முகாம் நிறைவு விழா

நாட்டு நலப்பணி திட்ட முகாம் நிறைவு விழா

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் கலை அறிவியல் கல்லுாரியின் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நிறைவு விழா நடந்தது.தனியார் கலை அறிவியல் கல்லலுாரி சார்பில், திருப்பாலபந்தலில் சிறப்பு முகாம் நடந்தது. இதில் பங்கேற்ற மாணவர்கள் துரிஞ்சிப்பட்டு, கோலப்பாறை, கீழத்தாழனுார் உள்ளிட்ட கிராமங்களில் துாய்மைப் பணி, மருத்துவ முகாம், விழிப்புணர்வு ஊர்வலம், பொது அறிவு போட்டி உள்ளிட்டவை நடத்தினர்.இதன் நிறைவு விழாவிற்கு, கல்லுாரி தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் சுப்ரமணியன், பொருளாளர் ஏழுமலை, துணைத் தலைவர் முஸ்டாக் அகமது முன்னிலை வகித்தனர். தாளாளர் பழனிராஜ், கல்லுாரி முதல்வர் நாராயணசாமி, துணை முதல்வர் மீனாட்சி, நிர்வாக அலுவலர் குமார் வாழ்த்திப் பேசினர்.திருப்பாலபந்தல் ஊராட்சி தலைவர் சரளா, கிராம நிர்வாக அலுவலர் சின்னதுரை, ஊராட்சித் துணைத் தலைவர் ஞானவேல், ஓய்வு பெற்ற தாசில்தார் தவமணி மாணவர்களின் செயல்பாடுகளை வாழ்த்திப் பேசினர்.நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ், திட்ட ஒருங்கிணைப்பாளர் மணிமாறன் நிகழ்ச்சியை நடத்தினர். கிராம மக்கள், பேராசிரியர்கள், நாட்டு நல பணி திட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ