உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மின் மோட்டார் திருட்டு மர்ம நபர்களுக்கு வலை

மின் மோட்டார் திருட்டு மர்ம நபர்களுக்கு வலை

உளுந்துார்பேட்டை, -உளுந்துார்பேட்டை அருகே மின் மோட்டாரை திருடிய நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.உளுந்துார்பேட்டை அடுத்த மூலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டித்துரை மனைவி சாந்தா, 48; கணவர் வெளிநாட்டில் இருப்பதால், விவசாய நிலத்தில் நெல், கரும்பு ஆகியவற்றை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் சாந்தா, விவசாய நிலத்திற்குச் சென்று பார்த்தபோது மின் மோட்டார் திருடு போயிருப்பது தெரியவந்தது.இது குறித்து சாந்தா அளித்த புகாரின் பேரில் உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ