உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு விழா

என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு விழா

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஆர்.கே.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நிறைவு விழா நடந்தது.சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு, பள்ளி தலைமையாசிரியர் சீனிவாசன் தலைமை தாங்கினார். பேரூராட்சி சேர்மன் ரோஜா ரமணி தாகப்பிள்ளை முன்னிலை வகித்தார். ஆர்.கே.எஸ்., கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் வரவேற்றார். விழாவில், கல்வி நிறுவனங்களின் முதல்வர் மகுடமுடி சிறப்புரையாற்றினார்.தாளாளர் குமார், செயலாளர் கோவிந்தராஜி, பொருளாளர் மணிவண்ணன், மதிவாணன், ஒன்றிய சேர்மன் திலகவதி நாகராஜன், பேரூராட்சி துணைச் சேர்மன் ஆஷாபி ஜாகீர், தொழிலதிபர் கதிரவன், சமூக ஆர்வலர் சதாம் உசேன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ராஜா, முகாம் நிறைவு அறிக்கையை வாசித்தார். கல்லுாரி பேராசிரியர்கள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். உதவி பேராசிரியர் ேஹமலதா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை