உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / திருக்கோவிலுார் அருகே ஆட்டோ மோதி ஒருவர் பலி

திருக்கோவிலுார் அருகே ஆட்டோ மோதி ஒருவர் பலி

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே பைக் மீது ஆட்டோ மோதிய விபத்தில் ஒருவர் இறந்தார்.திருக்கோவிலுார் அடுத்த கொழுந்திராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன், 65; டி.அத்திப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை, 54; இருவரும் நேற்று காலை பைக்கில் சொரையப்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தனர். பைக்கை மனோகரன் ஓட்டினார்.அத்திப்பாக்கம் அருகே சென்ற போது, எதிரே வந்த ஆட்டோ பைக் மீது மோதியது. இதில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். உடன், 108 ஆம்புலன்ஸ் மூலம் திருக்கோவிலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு இருவரையும் பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே மனோகரன் இறந்து விட்டதாக தெரிவித்தார். ஏழுமலை சிகிச்சை பெற்று வருகிறார்.மனோகரன் மனைவி ராணி கொடுத்த புகாரின் பேரில் மணலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ