உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  உலகளந்த பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

 உலகளந்த பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் சொர்க்கவாசல் வழியாக ஏகாதசி மண்டபத்தில் எழுந்தருளினார். திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று அதிகாலை 3:00 மணிக்கு பெருமாள் விஸ்வரூப தரிசனம், தொடர்ந்து நித்திய பூஜை, 4:30 மணிக்கு திருப்பாவை சாற்றுமறை, 4:45 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேதராக தேகளீச பெருமாள், வைரகல் பதித்த பாண்டியன் கிரீடம், செண்டை பேரண்ட்டை பட்சி பதக்கம், செங்கோல் ஏந்தி ஆஸ்தானத்திலிருந்து புறப்பாடாகி, ராமானுஜர் சன்னதியை வந்தடைந்தார். அங்கு விசேஷ ஆராதனை நடந்தது. காலை 5:30 மணிக்கு பரமதவாசல் திறக்கப்பட்டு, ஸ்ரீதேவி பூதேவி சமேதராக தேகளீசபெருமாள் எழுந்தளினார். பக்தர்கள் கோவிந்தா கோஷம் எழுப்ப, நம்மாழ்வார் எதிர்கொண்டு சேவை சாதித்தார். சுவாமி ஏகாதசி மண்டபத்தில் எழுந்தருள பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிப்பட்டனர். ஜீயர் ஸ்ரீதேகளீசராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின் பேரில் கோவில் ஏஜென்ட் கோலாகலன் மேற்பார்வையில் விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை