| ADDED : நவ 23, 2025 05:29 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மக்கள் நற்பணி கழகம் என்ற புதிய கட்சி துவக்க விழா நடந்தது. கள்ளக்குறிச்சி ஏமப்பேர் தனியார் மகாலில் மக்கள் நற்பணி கழகம் என்ற கட்சி துவக்க விழா நடந்தது. விழாவிற்கு கழக தலைவர் முருகு தலைமை தாங்கி, கட்சி கொடியை அறிமுகம் செய்து வைத்து பேசினார். ஒன்றிய செயலாளர் முருகன் வரவேற்றார். அப்போது சட்டசபை தேர்தலையொட்டி மேற்கொள்ள வேண்டிய கட்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கட்சியில் புதிய நிர்வாகிகளை இணைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் நிர்வாகிகள் ஆ.முருகன், அ.முருகன், வேல்முருகன், நல்லதம்பி, ராஜேந்திரன், செல்வி, முத்துலட்சுமி, அஞ்சலை, தாகப்பிள்ளை உட்பட பலர் பங்கேற்றனர்.