உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  சிறுமியுடன் திருமணம் வாலிபர் மீது போக்சோ வழக்கு

 சிறுமியுடன் திருமணம் வாலிபர் மீது போக்சோ வழக்கு

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே வாலிபர் மீது போக்சோ பிரிவில் போலீசார் வழக்கு பதிந்தனர். சங்கராபுரம் அடுத்த செம்பராம்பட்டு கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பர்வீன், 24; ஆட்டோ டிரைவர். இவர் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த ஆண்டு திருமணம் செய்தார். கணவர் குடிபோதையில் சிறுமியை தாக்கியதால், 2 மாதம் மட்டுமே கணவருடன் வசித்தார். அதன் பிறகு, தாய் வீட்டில் தங்கினார். இந்நிலையில் தன்னுடன் வந்து குடும்பம் நடத்த சிறுமியை கணவர் பர்வீன் வற்புறுத்தி வந்தார். கடந்த 24ம் தேதி சிறுமியை தன் வீட்டிற்கு அழைத்த பர்வீன், வர மறுத்ததால் தாக்கினார். இதனால், மனமுடைந்த சிறுமி எலிபேஸ்ட் சாப்பிட்டு மயங்கினார். சிறுமியை கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து, சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில், சங்கராபுரம் போலீசார் பர்வீன் மீது, சிறுமியை திருமணம் செய்ததாக போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்