மேலும் செய்திகள்
இளம்பெண் மாயம் போலீசார் விசாரணை
24-Oct-2025
சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே மாயமான தனது மகளை கண்டுபிடித்து தரும்படி தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் கண்டியாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் காவியா, 22; இளங்கலை பட்டதாரி. நேற்று முன்தினம் சங்கராபுரம் வட்டம் பூட்டை கிராமத்தில் கணேசனின் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு குடும்பத்தினர் சென்றனர். சடங்குகள் முடிந்து திரும்பி வந்து பார்த்தபோது உறவினரின் வீட்டிலிருந்த மகள் காவியா மாயமானார். எங்கு தேடியும் கிடைக்காததால் மகளை கண்டுபிடித்து தரும்படி போலீசில் புகார் கொடுத்தார். சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
24-Oct-2025