உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / 12 சவரன் நகை மாயம் போலீஸ் விசாரணை

12 சவரன் நகை மாயம் போலீஸ் விசாரணை

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே வீட்டில் வைத்திருந்த 12 சவரன் நகை மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருக்கோவிலுார் அடுத்த வேங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம், 53; கடந்த மாதம் 23ம் தேதி தங்கள் குடும்பத்திற்கு சொந்தமான 12 சவரன் நகையை இரும்பு பெட்டியில் வைத்து பூட்டி வைத்திருந்தார். நேற்று முன்தினம் மதியம் 2:00 மணி அளவில் பெட்டியை திறந்து பார்த்தபோது நகைகள் மாயமாகி இருந்தது. இது குறித்து மகாலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்குப்பதிந்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !