உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்; 322 பேருக்கு பணி ஆணை வழங்கல்

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்; 322 பேருக்கு பணி ஆணை வழங்கல்

கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. மேல்நிலைப் பள்ளி கலையரங்கத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட வேலைவாய்ப்புத் துறை மூலம் நேற்று மூன்றாவது முறையாக நடந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 104 முன்னனி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டன. 1,077 பெண்கள் உட்பட மொத்தம் 2,026 பேர் கலந்து கொண்டனர்.இதில் 136 பெண்கள் மற்றும் 5 மாற்றுத்திறனாளிகள் உட்பட 322 பேர் தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணைகளை கலெக்டர் ஷ்ரவன்குமார் வழங்கினார்.முகாமில் வேலைவாய்ப்புத்துறை மண்டல இணை இயக்குநர் லதா, துணை இயக்குநர் மணி, உதவி இயக்குநர் பாலமுருகன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் முரளிதரன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள் மனோகரன், செங்கதிர் உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ