உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பஜனை குழுவினருக்கு பரிசு

பஜனை குழுவினருக்கு பரிசு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் மார்கழி உற்சவ பஜனை குழுவினருக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் மார்கழி உற்சவம் நடந்து வருகிறது. அதனையொட்டி, வைஷ்ணவ கைங்கரிய டிரஸ்ட் சார்பில் ராமானுஜர் பஜனை மடத்திலிருந்து 150க்கும் மேற்பட்ட சிறுவர்கள், சிறுமியர்கள் உள்ளிட்ட பஜனை குழுவினர் அதிகாலை 4 மணி முதல் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பஜனை பாடல்கள் பாடிச் செல்கின்றனர்.இவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் முன்னாள் எம்.எல்.ஏ., அங்கையற்கண்ணி பரிசு வழங்கி கவுரவித்தார்.வைஷ்ணவி கைங்கரிய டிரஸ்ட் நிறுவன தலைவர் வினோத், பாகவதர்கள் சுப்ரமணியன், நாராயணன், நாகராஜ், அருண்குமார், சந்தோஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ