உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஆர்.கே.எஸ்., கல்லுாரி மாணவர்கள் பேரணி 

ஆர்.கே.எஸ்., கல்லுாரி மாணவர்கள் பேரணி 

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஆர்.கே.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் கணினி அறிவியல் பயன்பாட்டியல் துறை சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.ஊராட்சி தலைவர் விஜயலட்சுமி முத்துசாமி தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர், ஒன்றிய கவுன்சிலர் சீதாபாமா அருணாசலம் முன்னிலை வகித்தனர். கல்லுாரி துணை முதல்வர் ஜான்விக்டர் வரவேற்றார்.தொடர்ந்து கல்லுாரி மாணவ மாணவிகள் கிராமத்தின் முக்கிய வீதிகளின் பேரணியாக சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் ஊராட்சி துணை தலைவர் பெரியம்மாள் வண்டிக்காரன், சக்திவேல், வார்டு உறுப்பினர்கள் மலிகாபீ உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை