மேலும் செய்திகள்
விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை
11 hour(s) ago
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
11 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
14 hour(s) ago
கள்ளக்குறிச்சியின் கனவு திட்டமான ரயில் பாதை பணிகளை விரைவுபடுத்தி, நகர பகுதியிலேயே ரயில் நிலையத்தை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற இணைச் செயலாளர், நகர மன்ற, பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் ரங்கன் கூறியதாவது:கள்ளக்குறிச்சி நகராட்சியில் ஆடு அடிக்கும் தொட்டி, மீன் அங்காடிக்கு தனி இடம் ஒதுக்க வேண்டும். சித்தேரியை துாய்மைப்படுத்த வேண்டும். மயானத்தில் குப்பைகள் மற்றும் மீன், கோழி கழிவுகள் கொட்டுவதைத் தடுக்க வேண்டும்.கள்ளக்குறிச்சி மாவட்டமாக அறிவித்து 4 ஆண்டுகள் கடந்த நிலையிலும் கட்டப்படாமல் உள்ள மாவட்ட அலுவலக பணியை துவக்க வேண்டும். கள்ளக்குறிச்சியின் கனவு திட்டமான ரயில் திட்ட பணிகளை விரைவுபடுத்தி, ரயில் நிலையத்தை நகர பகுதியிலேயே அமைத்திட வேண்டும். பசுங்காயமங்கலம் ஏரியில் மணல் திருட்டை தடுக்க வேண்டும்.கடந்த 2001-2006 ஜெ., ஆட்சியில்தான் கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டது. வ.உ.சி., நகர், ராஜா நகர், கரியப்பா நகர், ஜெ.ஜெ., நகர் பகுதிகளில் நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைத்து, குடிநீர் பிரச்னை தீர்க்கப்பட்டது.முன்னாள் அமைச்சர் மோகன் தலைமையில் 500 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டது. 3 கோடி ரூபாய் மதிப்பில் கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டது. ஒருங்கிணைந்த நீதிமன்றமும் கட்டப்பட்டது.முன்னாள் எம்.பி., காமராஜ் முயற்சியால் 70 கோடி ரூபாய் மதிப்பில் சின்னசேலம் - கள்ளக்குறிச்சி ரயில் பாதை திட்டப் பணிகள் நடந்து வருகிறது. அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையிலான ஆட்சி காலத்தில்தான், அமைச்சர் சண்முகம், மாவட்ட செயலாளர் குமரகுரு முயற்சியின்பேரில், கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையும் துவங்கப்பட்டது. இவை அனைத்தும் அ.தி.மு.க.,வின் முன்னாள் எம்.எல்.ஏ., பிரபு, தற்போதுள்ள எம்.எல்.ஏ., செந்தில்குமார், முன்னாள் ஒன்றிய சேர்மன் ராஜசேகர் மற்றும் என்னைப்போன்று கள்ளக்குறிச்சி நகராட்சி தலைவர்கள் அழகுவேலுபாபு, பாலகிருஷ்ணன், ஆகியோர்களின் கூட்டு முயற்சியால் நடந்தது.அ.தி.மு.க., ஆட்சிக்குப்பின் எந்த ஒரு ஆக்கப்பூர்வமான திட்டமும் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. இவ்வாறு ரங்கன் கூறினார்.
11 hour(s) ago
11 hour(s) ago
14 hour(s) ago