உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ரேஷன் கடை ஊழியர் மர்ம சாவு

ரேஷன் கடை ஊழியர் மர்ம சாவு

உளுந்தூர்பேட்டை : ரேஷன் கடை ஊழியர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.உளுந்தூர்பேட்டை அடுத்த பாண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியராஜ்,45; திருக்கோவிலுார் அடுத்த தாழனுார் ரேஷன் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று இரவு 9 மணியளவில் பாண்டூர் அருகே விழுந்து கிடந்தார். அவ்வழியே சென்றவர்கள், அவரை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தார்.இந்நிலையில் பாக்கியராஜ், உளுந்தூர்பேட்டை அடுத்த களமருதூர் அருகே பைக்கில் வந்த போது காரில் வந்தவர்கள் தகராறு செய்து தாக்கியதாகவும், அப்பகுதியை சேர்ந்தவர்கள் இருவரையும் விலக்கிவிட்டு அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால், காரில் வந்தவர்கள் தாக்கியதில் பாக்கியராஜ் இறந்ததாக பாண்டூர் கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.உளுந்துார்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை