உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ரேஷன் கடை விற்பனையாளர் பயிற்சி கூட்டம்

ரேஷன் கடை விற்பனையாளர் பயிற்சி கூட்டம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு பயிற்சி கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில், பொது வினியோக திட்ட துணைப்பதிவாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். பொது வினியோக திட்ட கூட்டுறவு சார் பதிவாளர்கள் சண்முகவேல், சக்திவேல், மணிகண்டன், கிரண்குமார் முன்னிலை வகித்தனர். ரேஷன் கடையில் அத்தியாவசிய பொருட்களை சரியான எடையில் வழங்குவதை உறுதி செய்யும் வகையில், பி.ஓ.எஸ்., இயந்திரம் 'ப்ளூடூத்' வழியாக மின்னணு எடைத்தராசுடன் இணைக்கப்பட்டுள்ளது.முதற்கட்டமாக மாவட்டத்தில், 317 ரேஷன்கடைகளில் இம்முறை அமலில் உள்ளது.இந்த முறையை பயன்படுத்தி பொருட்கள் வினியோகிப்பது தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது. எடை தராசை இணைத்தல், கையாளும் முறை உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை