விபத்து ஏற்படுத்தும் செடிகள் அகற்றம்
ரிஷிவந்தியம்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியால், சூளாங்குறிச்சி அருகே சாலையில் விபத்து ஏற்படும் வகையில் இருந்த செடிகள் வெட்டி அகற்றப்பட்டது. ரிஷிவந்தியம் அடுத்த சூளாங்குறிச்சி சாலையில், மணிமுக்தா ஆற்று பாலம் அருகே வளைவு பகுதியில் சாலையின் இருபுறமும் அதிக அளவு செடிகள் வளர்ந்திருந்தது. இதனால் எதிர் திசையில் வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு செடிகள் இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இது குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தினமலரில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, நெடுஞ்சாலை துறை சார்பில் சாலையோரம் இருந்த அடர்ந்த செடிகள் வெட்டி அகற்றும் பணி நேற்று நடந்தது.