| ADDED : டிச 31, 2025 04:15 AM
கள்ளக்குறிச்சி: தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றும் மத்திய அரசை கண்டித்து ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றி, திட்டத்திற்கான நிதியை குறைத்துள்ள மத்திய அரசை கண்டித்து உண்ணாவிதர போராட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்திற்கு, மாவட்ட தலைவர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். மோகன்குமார், குமரன், சுதாகர், தாஜிதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் ஆரோக்கியசாமி வரவேற்றார். இதில், மாவட்ட செயலாளர் தயாபரன் கோரிக்கை குறித்து பேசினார். மாநில செயலாளர் கொளஞ்சிவேலு துவக்கவுரையாற்றினார். மாவட்ட நிர்வாகிகள் செந்தில், ஜார்ஜ் வாஷிங்டன், ரவி, ஆனந்தகிருஷ்ணன் ரங்கசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றும் மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தினர். மாநில துணை பொதுச் செயலாளர் மகாலிங்கம் நிறைவுரையாற்றினார். இதில் அலுவலர்கள் பலர் பங்கேற்றனர். மாவட்ட பொருளாளர் வீரபத்திரன் நன்றி கூறினார்.