உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி

விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி

கள்ளக்குறிச்சி : சின்னசேலம் அடுத்த அம்மகளத்துார் செல்வ விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி நேற்று நடந்தது.அதனையொட்டி நேற்று காலை கணபதி ஹோமமும் தொடர்ந்து, சுவாமிக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிேஷகம் மற்றும் ஆராதனை நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.வழிபாடுகளை கோவில் அர்ச்சகர் முரளி செய்தார். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் ஞானவேல், எழிலரசி செய்திருந்தனர்.இதேபோன்று, சின்னசேலம் அரண்மனை விநாயாகர் கோவில், கள்ளக்குறிச்சி சக்தி விநாயகர் கோவில், சேலம் மெயின் ரோடு ஆலமரத்தடி விநாயகர் கோவில்களிலும் சதுர்த்தி சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி