உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  தையல் இயந்திரம் பெறுவதற்கான மாற்றுத்திறனாளிகள் தேர்வு முகாம்

 தையல் இயந்திரம் பெறுவதற்கான மாற்றுத்திறனாளிகள் தேர்வு முகாம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தையல் இயந்திரம் பெற தகுதியானவர்கள் தேர்வு செய்யும் முகாம் நடந்தது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் பொது பிரிவின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான தையல் இயந்திரங்கள் வழங்குவதற்கான நேர்முக தேர்வு முகாம் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களில் விண்ணப்பித்திருந்த 260 மாற்றுத் திறனாளிகளுக்கு நேர்முகத் தேர்வு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது. தேர்வுக்குழு உறுப்பினர்களாக மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் அந்தோணிராஜ், முடநீக்கியல் வல்லுனர் பிரபாகரன், செயல்திறன் உதவியாளர் முனுசாமி ஆகியோர் பயனாளிகளை தேர்வு செய்தனர். அதில், 250 பேர் தகுதியுடையவர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை