உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர் முகாமில் 349 மாற்றுத்திறனாளிகள் தேர்வு

இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர் முகாமில் 349 மாற்றுத்திறனாளிகள் தேர்வு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரத்துடன் கூடிய பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் தேர்வு முகாமில் 349 பேர் தேர்வு செய்யப்பட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 18 வயதுக்கு மேற்பட்ட கால்கள் பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்வு முகாம் நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த முகாமில் கால்கள் பாதித்து கல்வி, வேலை, சுயதொழில் செய்யும் மாற்றுத்திறனாளிகளை அடிப்படையாக கொண்டு மருத்துவ தகுதி சான்றுடன் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வுக்குழு உறுப்பினர்கள் அரசு எலும்பு முறிவு மருத்துவர் தினேஷ்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி, முடநீக்கியல் வல்லுனர் பிரபாகரன் உள்ளிட்டோர் தேர்வு செய்தனர். இதில் 581 மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதில், 417 பேர் கலந்து கொண்டனர். முகாமில் தேர்வு செய்யப்பட்ட 349 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.98,000- மதிப்புள்ள இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக 202 வாகனங்களும் மீதமுள்ளவர்களுக்கு கூடுதல் ஒதுக்கீடு பெற்று விரைவில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ