மேலும் செய்திகள்
மரக்கிளை முறிந்து பைக்கில் சென்றவர் காயம்
06-Dec-2024
திருக்கோவிலூர் : அரகண்டநல்லூரில் மாவட்ட தொழில் மையம் சார்பில், கலைஞர் கைவினை திட்ட சிறப்பு முகாம் நடந்தது.கைவினை கலைகள் மற்றும் தொழில்கள் செய்வோரிடமிருந்து பிணையற்ற மானியத்துடன் கூடிய கடன் உதவி பெறும் சிறப்பு திட்ட முகாம், விழுப்புரம் மாவட்ட தொழில் மையம் சார்பில், அரகண்டநல்லூர் பேரூராட்சியில் நடந்தது. மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அருள் தலைமை தாங்கினார். மாவட்ட தாட்கோ மேலாளர் ரமேஷ் குமார், செயல் அலுவலர் முரளி முன்னிலை வகித்தனர். பேரூராட்சி தலைவர் அன்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று, சிறு தொழில் துவங்குவதற்கான சிறப்பான வாய்ப்பு குறித்து விளக்க உரையாற்றினார். பேரூராட்சி இளநிலை உதவியாளர் பாலசுப்பிரமணியன், மேற்பார்வையாளர் ரமேஷ், எழுத்தர் சுதாகர், பேரூராட்சி துணைத்தலைவர் கதிஜாபிவி, கவுன்சிலர்கள் வேம்பு, சுந்தரமூர்த்தி, காமராஜ், சரவணன், மாணிக்கம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
06-Dec-2024