உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  சங்கராபுரம் தொகுதியில் சிறப்பு தீவிர திருத்த பணி : கலெக்டர் ஆய்வு

 சங்கராபுரம் தொகுதியில் சிறப்பு தீவிர திருத்த பணி : கலெக்டர் ஆய்வு

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் தொகுதியில் நடக்கும் சிறப்பு தீவிர திருத்த பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளில் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடந்து வருகிறது. இதில் சங்கராபுரம் சட்டசபை தொகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக கணக்கீட்டு படிவங்களை வாக்காளர்களிடமிருந்து சேகரித்து பதிவேற்றம் செய்து வருகின்றனர். சங்கராபுரம் தொகுதியில் ஆலத்துார், தேவபாண்டலம், மூரார்பாளையம் ஆகிய கிராமங்களில் சிறப்பு தீவிர திருத்தம் பணிகளை கலெக்டர் பிரசாந்த் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, சிறப்பு தீவிர திருத்த பணி மேற்கொள்ளும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்