உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / துணை மற்றும் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்: ஜூன் 1ம் தேதி வரை அவகாசம்

துணை மற்றும் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்: ஜூன் 1ம் தேதி வரை அவகாசம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணை தேர்வுகள் மற்றும் தனித்தேர்வர்கள் வரும் ஜூன் 1ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஷ்ரவன்குமார்தெரிவித்துள்ளார்.வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதம் நடைபெற உள்ள 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தேர்வர்கள் தாங்கள் பயின்ற பள்ளிக்கு நேரில் சென்று ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதேபோல் தனித்தேர்வர்கள் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, திருக்கோவிலுார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, உளுந்துார்பேட்டை அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆகிய 4 சேவை மையங்களுக்கு உரிய ஆவணங்களுடன் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு தேர்வர்கள் ஒவ்வொரு பாடத்திற்கும் தேர்வு கட்டணம் 125 ரூபாய் மற்றும் ஆன்லைன் பதிவுக் கட்டணம் 70 ரூபாய் செலுத்த வேண்டும்.பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வினை முதன் முறையாக எழுத உள்ள தனித்தேர்வர்களுக்கு தேர்வுக்கட்டணம் ஒவ்வொரு பாடத்திற்கும் 185 ரூபாய் மற்றும் ஆன்லைன் பதிவு கட்டணம் 70 ரூபாய் என மொத்தம் 255 ரூபாய் செலுத்த வேண்டும்.பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதி தோல்வியடைந்த, வருகை புரியாத தேர்வர்களுக்கு ஒவ்வொரு பாடத்திற்கும் 50 ரூபாய் வீதம் தேர்வுக்கட்டணம் மற்றும் இதரக்கட்டணமாக 35 ரூபாய் செலுத்த வேண்டும். இதற்கான ஆன்லைன் பதிவுக்கட்டணம் 70 ரூபாய் செலுத்த வேண்டும்.வரும் ஜூன் 1ம் தேதி வரை காலை 11 மணி முதல் மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஜூன் 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்க தவறும் தேர்வர்களுக்கு சிறப்பு அனுமதி திட்டத்தில், விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.இந்த சிறப்பு அனுமதி திட்டத்தின் மூலம், வரும் ஜூன் 3, 4ம் தேதி இரு நாட்களில், தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக மேல்நிலை வகுப்பிற்கு, 1,000 ரூபாய் மற்றும் 10ம் வகுப்பிற்கு 500 ரூபாய் சிறப்பு கட்டணமாக செலுத்தி ஆன்லைனில், தக்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்.மேலும், விரிவான தகவல்களை, www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில் காணலாம்.இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை