உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  நில அளவை அலுவலர்கள் போராட்டம்

 நில அளவை அலுவலர்கள் போராட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் தமிழ் நாடு நில அளவை அலுவலர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நில அளவை அலுவலர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 18ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து கலெக்டர் அலுவலகம் முன் நேற்று காத்திருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் பிரபாகர் தலைமை தாங்கினார். இணைச் செயலாளர் சக்திவேல், கோட்ட செயலாளர் நடராஜ் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் தேவராஜன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் இந்திரகுமார், மாநில துணைத் தலைவர் செந்தில்முருகன் ஆகியோர் கோரிக்கை வலியுறுத்தி பேசினர். மாநில செயலாளர் ஆனந்தகிருஷ்ணன் வாழ்த்தி பேசினார். போராட்டத்தில், களப்பணியாளர்கள் பணிச் சுமையை போக்க வேண்டும். பணிகளை முறைப்படுத்த வேண்டும். தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவிகளை மீண்டும் வழங்க வேண்டும். ஒப்பந்த முறை பணி நியமனத்தை முற்றிலுமாக கைவிடுதல் வேண்டும். நில அளவர் பணியிடங்களை நிரப்பி வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில் சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். உளுந்துார்பேட்டை உளுந்துார்பேட்டை தாலுகா அலுவலகம் முன் அனைத்து வருவாய் துறை அலுவலர்கள் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தலைமையிடத்து துணை தாசில்தார் சுதாகர் தலைமை தாங்கினார். ஆர்பாட்டத்தில் சக்கரவர்த்தி, கணேசன், ரமேஷ், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்