உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  பெட்ரோல் பாட்டிலுடன் மனு அளிக்க வந்த பெண்: எப்போதும் வைத்திருப்பேன் என வாக்குவாதம்

 பெட்ரோல் பாட்டிலுடன் மனு அளிக்க வந்த பெண்: எப்போதும் வைத்திருப்பேன் என வாக்குவாதம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு பெட்ரோல் பாட்டிலுடன் மனு அளிக்க வந்த பெண்ணை போலீசார் தடுத்து நிறுத்தினர். கள்ளக்குறிச்சி அடுத்த கரடிசித்துார் கிராமத்தைச் சேர்ந்த அம்புரோஸ் மகள் ஆண்டனிரோஸ்லின் என்பவர் மனு அளிக்க கலெக்டர் அலுவலகத்திற்கு ஸ்கூட்டியில் நேற்று வந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரது ஸ்கூட்டரை சோதனை செய்ததில், பாட்டிலில் பெட்ரோல் இருந்தது தெரிந்தது. விசாரணையில், கள்ளக்குறிச்சி அடுத்த கரடிசித்துார் கோரைக்குழி ஓடை மற்றும் கிளைவாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி மனு அளிக்க வந்தது தெரிந்தது. மேலும், ஸ்கூட்டரில் எப்போதும் பெட்ரோல் வைத்திருப்பேன், தற்கொலை எண்ணத்தில் எடுத்து வரவில்லை என ஆண்டனி ரோஸ்லின் தெரிவித்தார். தொடர்ந்து, போலீசார் பெட்ரோல் பாட்டிலை எடுத்துக்கொண்டு மனு அளிக்க செல்லுமாறு தெரிவித்தனர். அதற்கு மறுப்பு தெரிவித்து, பெட்ரோல் பாட்டிலை தருமாறும், வேறோரு நாளில் மனு அளிக்கிறேன், தற்போது வீட்டிற்கு செல்கிறேன் எனவும் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார். தொடர்ந்து, போலீசார் பெட்ரோலை ஸ்கூட்டர் டேங்கில் ஊற்றியதையடுத்து, ஆண்டனி ரோஸ்லின் மனு அளிக்காமல் வெளியே சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்