மேலும் செய்திகள்
விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
18 minutes ago
கள்ளக்குறிச்சி இந்திரா நகரில் குடிநீர் வீணாகும் அவலம்
23 minutes ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பயிர் சாகுபடிக்கு தேவையான உரங்கள் இருப்பு உள்ளது என வேளாண்மை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்சமயம் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையினை பயன்படுத்தி விவசாயிகள் நெல், மக்காச்சோளம், கரும்பு, உளுந்து பருத்தி, மரவள்ளி மற்றும் காய்கறி போன்ற பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உரக்கடைகளில் சாகுபடிக்கு தேவையான ரசாயன உரங்கள் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதில் யூரியா 5,199 மெ.டன், டி.ஏ.பி 2011 மெ.டன், பொட்டாஷ் 1,843 மெ.டன், சூப்பர் பாஸ்பேட் 1,223 மெ.டன் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் 8,407 மெ.டன் அளவு உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு இப்பருவத்தில் பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் தனியார் உர விற்பனையாளர்கள் அரசு நிர்ணயித்த விலைக்கு மிகாமல் உரங்களை விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும். இருப்பு மற்றும் அதிகபட்ச சில்லரை விலைப்பட்டியலின் விவரங்களை தகவல் பலகையில் விவசாயிகளின் இரசாயன உரங்களின் பார்வைக்கு தெரியும் வண்ணம் வைக்க வேண்டும். உர விற்பனையாளர்கள் விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக உரங்களுடன் இணை இடுபொருட்களை வாங்கிட கட்டாயப்படுத்த கூடாது. உரங்களை விற்பனை செய்யும் போது விற்பனை பட்டியலை உடன் வழங்கிட வேண்டும். அரசு விதிகளை மீறும் உர விற்பனையாளர்கள் மீது 1985- உரச்சட்டத்தின் அடிப்படையில் கடுமையான நடவடிக்கை மேற்கொள்வதுடன் உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 minutes ago
23 minutes ago