உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / திருவள்ளுவர் நாள் ஊர்வலம்

திருவள்ளுவர் நாள் ஊர்வலம்

சின்னசேலம் : சின்னசேலம் திருக்குறள் பேரவை சார்பில் திருவள்ளுவர் நாள் ஊர்வலம் நடந்தது.சின்னசேலத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு பேரவை நிறுவன தலைவர் பூங்குன்றன் தலைமை தாங்கினார். கல்லை திருக்குறள் நடுவம் தலைவர் மோகன் முன்னிலை வகித்தார். துணைச்செயலர் அருள் வரவேற்றார்.சின்னசேலம் ரயில்நிலைய முன்னாள் தலைவர் செல்வராஜ், சாரதா வித்தியாலயா தாளாளர் உதயசூரியன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர். முன்னாள் தலைமையாசிரியர் தமிழ்மணி, துணைத் தலைவர் ராசா ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தனர். திருக்குறள் ஊர்தியுடன் முக்கிய சாலைகள் வழியாக சென்ற ஊர்வலத்தில் இளங்கோவன், நடராசன், ஆறுமுகம், ஆனந்தகிருஷ்ணன், ஞானசேகரன், சுப்ரமணியன், ராமசாமி, கண்ணன், கொளஞ்சியப்பிள்ளை, அருணகிரி,மணி, குமாரசாமி, தாமோதரன், விக்னேஷ், தீபன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். பொருளாளர் கருப்பன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ