உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  சங்கராபுரத்தில் தொடரும் டிராபிக் ஜாம்

 சங்கராபுரத்தில் தொடரும் டிராபிக் ஜாம்

சங்கராபுரம்: சங்கராபுரம் நகரில் தினசரி ஏற்படும் டிராபிக் ஜாமால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் நகரம் வேகமாக வளர்ந்து வரும் நகரமாக மாறிவருகிறது. சங்கராபுரறாம் சுற்றி உள்ள 40 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அத்தியாவசிய தேவைக்கு தினசரி சங்கராபுரம் வந்து செல்கின்றனர். இரு சக்கர வாகனத்தில் வரும் அவர்கள் தங்களின் வாகனத்தை சாலையின் இரு புறமும் தாறுமாக நிறுத்தி செல்கின்றனர். இதனால் சங்கராபுரம் கடை வீதி, பூட்டை ரோடு, கள்ளகுறிச்சி மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் தினமும் கடும் டிராபிக் ஜாம் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். போக்குவரத்தை சரி செய்ய சங்கராபுரத்தில் போக்குவரத்து போலீசார் கிடையாது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உதயமாகி 4 ஆண்டுகள் ஆகியும் சங்கராபுரத்திற்கு போக்குவரத்து போலீசார் நியமிக்கப்படவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்டட அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை விடுத்தும் இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நலன் கருதி சங்கராபுத்திற்கு என தனியாக போக்குவரத்து போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை