உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

 விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த மேல்சிறுவள்ளூர் கிராமத்தில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி நடந்தது. பயிற்சிக்கு வட்டார துணை வேளாண் அலுவலர் முருகேசன் தலைமை தாங்கி, வேளாண்மை துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், விவசாயிகள் அடையாள அட்டை பதிவு செய்வதின் அவசியம் குறித்து விளக்கினார். முகாமில் தோட்டக்கலை உதவி அலுவலர் ரங்கநாதன் பங்கேற்று தோட்டக்கலை துறை திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு அலுவலர் அகஸ்டின் பங்கேற்று கரும்பு திட்டங்கள் குறித்து விளக்கினார். முகாமில், உதவி வேளாண்மை அலுவலர் வெங்கடேசன், ஆத்மா திட்ட தொழில்நுட்ப அலுவலர் அருண்குமார், பயிர் அறுவை திட்ட அலுவலர் ஏழுமலை உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை