| ADDED : ஜன 19, 2024 11:03 PM
கள்ளக்குறிச்சி- சின்னசேலத்தில் பி.டி.ஓ., அலுவலகத்தில் ஒன்றிய கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, சேர்மன் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். துணைச் சேர்மன் அன்பு மணிமாறன், பி.டி.ஓ.,க்கள் ரவிசங்கர், ஜெகநாதன் முன்னிலை வகித்தனர். அலுவலக உதவியாளர் திருவேங்கடம் மன்ற பொருள் வாசித்தார்.கூட்டத்தில், கிராமங்களில் கொசு ஒழிப்பு பணி மேற்கொள்வது, அலுவலக செலவினங்கள் உட்பட 25க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, கோடைக்காலம் வர இருப்பதால் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.சின்னசேலம் பகுதியில் அரசு சார்பில் நடைபெறும் சொட்டுநீர் பாசனம் அமைப்பது தொடர்பான சிறப்பு முகாமில் விவசாயிகள் பங்கேற்று பயனடைய அறிவுறுத்தப்பட்டது.கூட்டத்தில், சுதா, ராஜேஸ்வரி, சித்ரா, தனலட்சுமி, பெரியசாமி, நதியா, தமிழ்மணி உட்பட ஒன்றிய கவுன்சிலர்கள் பங்கேற்றனர். துணை பி.டி.ஓ., பழனிவேல் நன்றி கூறினார்.