உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிேஷகம்

வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிேஷகம்

சின்னசேலம் : சின்னசேலம் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிேஷகத்தில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.சின்னசேலம் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது. விழாவையொட்டி கடந்த 19 ம் தேதி கணபதி ஹோமம், சக்தி அழைத்தல் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. 20ம் தேதி யாகசாலை பூஜைகள், சூரிய சந்திரன் பூஜை, கோ பூஜை, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வைக்கப்பட்ட தம்பதி பூஜை, சொற்பொழிவு நடந்தது. சிறப்பு வாய்ந்த நவசக்தி அர்ச்சனையும் செய்தனர்.தொடர்ந்து நேற்று காலை கோ பூஜை, மண்டப பூஜை, நாடி சந்தானம், நவாக்னி பூஜைகள், தேவி மகாத்மியம், வேத கீத நாதஉபசாரம் பூஜைகள் நடத்தப்பட்டது. காலை 11.30 மணியளவில் ராஜகோபுரம், மூலஸ்தான விமானம், வாசவி கன்னிகா பரமேஸ்வரி மற்றும் ராஜகணபதி, சந்தான கோபாலகிருஷ்ணன், சீதா லஷ்மண ராமச்சந்திர மூர்த்தி, நவகிரகங்கள், கோஷ்ட தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் செய்து வைக்கப்பட்டது.இதனையடுத்து 10 விதமான தரிசனங்கள் கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு செய்து வைக்கப்பட்டது. பக்தர்கள் பலர் பங்கேற்று வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மனை வழிபட்டனர். கும்பாபிேஷகத்தை திண்டிவனம் பாடசாலை ஆசிரியர் மணிகண்டன் தலைமையிலான குழுவினர் செய்து வைத்தனர். ஆர்ய வைசிய மகிளா சபை சார்பில் பெண்களுக்கு சுமங்கலி தாம்பூலங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சின்னசேலம் ஆர்ய வைசிய சமூகத்தினர் செய்திருந்தனர். தொடர்ந்து நேற்று இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை