உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கச்சேரி சாலையில் தாறுமாறாக நிறுத்தும்: வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு

கச்சேரி சாலையில் தாறுமாறாக நிறுத்தும்: வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குச்சி கச்சேரி சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் அறிவித்து 6 ஆண்டுகள் கடந்தும், முக்கிய சாலைகள் ஏதும் மேம்படுத்தப்படவில்லை. நகரப்பகுதியில் வாகன நெரிசல் குறையவில்லை. முக்கிய சாலைகளான கச்சேரி சாலை, காந்தி ரோ டு, சேலம் சாலை ஆகிய சாலைகளில் அரசு அலுவலகங்கள், வங்கிகள், வணிக நிறுவனங்கள் பல இயங்கி வருகின்றன. இச்சாலைகளில் விதிமுறைகளை மீறி பைக்குகள், கார்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகிறது. தள்ளுவண்டி கடைகள் ஆங்காங்கே நிறுத்தி வியாபாரம் செய்கின்றனர். இதனால் சாலைகள் அனைத்தும் சுருங்கிவிடுகிறது. காலை மாலை நேரத்தில் பள்ளி வாகனங்கள் உட்பட அதிகளவிலான வாகனங்கள் நகரைக் கடந்து செல்கின்றன. கச்சேரி சாலையின் இருபுறமும் தாறுமாறாக நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களால் பஸ்கள், லாரிகள் போன்ற கனரக வாகனங்கள் சாலையை கடந்து செல்ல மிகவும் சிரமம் ஏற்படுகிறது. போக்குவரத்து போலீசார் இப்பகுதியை கடந்து செல்லும்போது, கண்ணை மூடிக் கொண்டு செல்கிறார்களா என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே, இப்பகுதியில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை