மேலும் செய்திகள்
விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை
19 hour(s) ago
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
19 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
22 hour(s) ago
சின்னசேலத்தில் கும்ப கலச பூஜை
23 hour(s) ago
கள்ளக்குறிச்சி: உளுந்துார்பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பிரதம மந்திரியின் மாவட்ட அளவிலான தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை இன்று நடக்கிறது.இதுகுறித்து கலெக்டர் ஷ்ரவன்குமார் செய்திக்குறிப்பு:தேசிய தொழிற் பழகுநர் பயிற்சி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான பிரதம மந்திரியின் தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் உளுந்தூர்பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இன்று 8ம் தேதி காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை நடக்கிறது.முகாமில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை போன்ற அரசு பொதுத்துறை நிறுவனங்கள்.சர்க்கரை உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முன்னணி நிறுவனங்கள் ஒரே இடத்தில் தொழிற் பழகுநர் பயிற்சிக்கு 500க்கும் மேற்பட்ட இடங்களை நிரப்ப உள்ளனர். ஐ.டி.ஐ., முடித்தவர்கள் பயிற்சியில் சேர்ந்து சான்றிதழ் பெறலாம்.மேலும் ஐ.டி.ஐ.,யில் சேர்ந்து பயிற்சி பெற முடியாத 10ம் வகுப்பு மற்றும் அதற்கு மேலும் கல்வி தகுதியுடையவர்கள் நேரடியாக தொழிற்சாலைகளில் அப்ரண்டிசாக சேர்ந்து 3 முதல் 6 மாதகால அடிப்படை பயிற்சியும், ஓராண்டு முதல் 2 ஆண்டுகள் வரை பயிற்சி பெற்று தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெறலாம்.இப்பயிற்சிக்கு மாதாந்திர உதவித்தொகை 8,500 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை நிறுவனத்தால் வழங்கப்படும். எனவே இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெறலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
19 hour(s) ago
19 hour(s) ago
22 hour(s) ago
23 hour(s) ago