உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மது பாட்டில் பதுக்கிய பெண் கைது

மது பாட்டில் பதுக்கிய பெண் கைது

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே கள்ளத்தனமாக மது பாட்டில்களை விற்பனை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.திருக்கோவிலுார் சப் இன்ஸ்பெக்டர் மதன்மோகன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். பழங்கூரில் ஒரு வீட்டில் கள்ளத்தனமாக மது பாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், வீட்டை சோதனை செய்ததில் வீட்டின் பின்புறம் பாதுக்கி வைத்திருந்த ஐந்து பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.இதனை பதுக்கிய பாண்டியன் மனைவி சுமதி, 40; மீது திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்