உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பூச்சி கொல்லி மருந்து குடித்து பெண் தற்கொலை

பூச்சி கொல்லி மருந்து குடித்து பெண் தற்கொலை

கச்சிராயபாளையம்: துரூர் கிராமத்தில் பூச்சி கொல்லி மருந்து குடித்த பெண் இறந்தார். கச்சிராயபாளையம் அடுத்த துரூர் கிராமத்தை சேர்ந்தவர் கட்டையன் மனைவி மாயாவதி, 45; இவர்களுக்கு 6 குழந்தைகள். மாயாவதி நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். சிகிச்சைக்கு சென்ற போது அவரது கர்ப்ப பையில் கட்டி இருப்பதாகவும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த மாயாவதி நேற்று முன்தினம் வி வசாய வயலுக்கு பயன்படுத்த வைத்திருந்த பூச்சி கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாயாவதி நேற்று இறந்தார். இது குறித்த புகாரின் பேரில், கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ