உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  உலக மரபு வார விழா போட்டி பரிசளிப்பு

 உலக மரபு வார விழா போட்டி பரிசளிப்பு

திருக்கோவிலுார்: தொல்லியல் துறை சார்பில் உலக மரபு வார விழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. உலக மரபு வார விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை திருக்கோவிலுார் அருங்காட்சியகம் சார்பில், உலக மரபு வார விழா நடந்தது. இதில் திருக்கோவிலுார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவிகள், என் பார்வையில் கபிலர் குன்று தலைப்பில் ஓவிய போட்டியும், தொன்மையை பாதுகாப்போம் தலைப்பில் கட்டுரை போட்டியில் பங்கேற்ற னர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி வளாகத்தில் பரிசளிப்பு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் கீதா தலைமை தாங்கினார். வரலாற்று ஆசிரியர் அல்லி வரவேற்றார். தொல்லியல் துறை மாவட்ட அலுவலர் சுரேஷ் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார். மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவன் தலைவர் உதியன் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். ஆசிரியர்கள் சூர்யா, காமாட்சி, மஞ்சுளா, புவனேஸ்வரி, இந்திரா உள்ளிட்ட ஆசிரியர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ