உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பணத்தை திருடிய வாலிபர் கைது

பணத்தை திருடிய வாலிபர் கைது

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் பைக் பெட்டியில் பணத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி ராமச்சந்திரா நகரை சேர்ந்த ராமசாமி மகன் ராம்ஜெயம்,39; இவர் நேற்று மாலை தனது பைக்கில் உள்ள பெட்டியில் ரூ.300 பணம் வைத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மீண்டும் வந்து பார்த்தபோது, பெட்டியை திறந்து பணத்தை எடுத்துக் கொண்டு வாலிபர் ஒருவர் தப்பியோட முயன்றார். உடன் அவரை மடக்கி பிடித்து கள்ளக்குறிச்சி போலீசில் பொது மக்கள் ஒப்படைத்தனர்.விசாரணையில் கள்ளக்குறிச்சி கருணாபுரம் சேர்ந்த சுப்ரமணி மகன் ஆறுமுகம், 19; என்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் ஆறுமுகத்தை கைது செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை