உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / திருப்போரூர் பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டப்பணி ஆய்வு

திருப்போரூர் பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டப்பணி ஆய்வு

திருப்போரூர் : திருப்போரூர் பேரூராட்சியில், பாதாளச் சாக்கடை திட்டம் ஏற்படுத்துவதற்கான மதிப்பீடு தயாரிக்கும் பணி, நேற்று துவங்கியது. தமிழக அரசு, 126 பேரூராட்சிகளில் பாதாளச் சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும் என, அறிவித்தது. அதில், திருப்போரூர் பேரூராட்சியும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நேற்று, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற் பொறியாளர் நூருல்லா, உதவி பொறியாளர்கள் செல்வராஜ், உபேந்திரன் ஆகியோர், திருப்போரூர் பேரூராட்சியில் முகாமிட்டு ஆய்வு மேற்கொண்டனர். காலவாக்கம், கண்ணகப்பட்டு, திருப்போரூர் பகுதிகளில், திட்டம் செயல்படுத்தப்படும் இடங்களை, அதிகாரிகள் அளந்து ஆய்வு மேற்கொண்டனர். சுத்திகரிப்பு மையம் அமைப்பதற்காக காலவாக்கம், நெம்மேலி ஆகிய கிராமங்களில், இடங்களையும் தேர்வு செய்தனர்.

குடிநீர் வடிகால்வாரிய பொறியாளர்கள் கூறியதாவது: திருப்போரூர் பேரூராட்சியில், பாதாளச் சாக்கடை திட்டம் செயல்படுத்த, பேரூராட்சி பணியாளர்கள் உதவியோடு, இடங்களை அளவீடு செய்து வருகிறோம். இப்பணி, இன்னும் சில தினங்களில் முடிவடையும். பேரூராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளிலும், பாதாளச் சாக்கடை திட்டத்திற்காக, 50 கி.மீ., தூரத்திற்கு குழாய்கள் அமைக்க உத்தேசித்துள்ளோம். இதற்கு, 15 கோடி ரூபாய் செலவாகும் என, மதிப்பிட்டுள்ளோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை