உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / புதர்மண்டி கிடக்கும் மிளகர்மேனி பொதுக்குளம்

புதர்மண்டி கிடக்கும் மிளகர்மேனி பொதுக்குளம்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், திருவானைக்கோவில் ஊராட்சிக்கு உட்பட்டது மிளகர்மேனி கிராமம். இக்கிராமத்தில், சாலையோரத்தில், ஒரு ஏக்கர் பரப்பிலான பொது குளம் உள்ளது.தென்பாதி மற்றும் மிளகர்மேனி கிராம விவசாய நிலங்களுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாக இக்குளம் இருந்து வந்தது.மேலும், மழைக்காலங்களில் இந்த குளம் நிரம்பி தண்டரை வழியாக சிதண்டிமண்டபம் ஏரிக்கு கடந்த ஆண்டுகளில் தண்ணீர் செல்வது வழக்கம். இதனிடையே, பல ஆண்டுகளாக இந்த குளம் முறையான பராமரிப்பின்றி தூர்ந்து காணப்படுகிறது.மேலும், குளத்திற்கான வரத்து கால்வாய்களும் தூர்ந்ததால் பருவமழை காலத்திலும் குளத்திற்கு நீர் வரத்து இல்லாத நிலை உள்ளது. இதனால், இக்குளம் பயன்பாடு இல்லாமல் பாழாகி வருகிறது.எனவே, மிளகர்மேனி பொதுக்குளத்தை தூர்வாரி சுற்றிலும் கரை பலப்படுத்த வேண்டும். வரத்து கால்வாய் மற்றும் இக்குளத்தின் நீர் போக்கு கால்வாய்களை பராமரிப்பு பணி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ