உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மொபைல்போன் திருடிய 5 பேர் கைது

மொபைல்போன் திருடிய 5 பேர் கைது

ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடம் சிப்காட்டில்உள்ள 150க்கும் அதிகமான தொழிற்சாலைகளில், ஏராளமான வடமாநில தொழிலாளிகள், சுற்றியுள்ள கிராமங்களில் வாடகைக்கு தங்கி வேலை செய்து வருகின்றனர்.இந்த நிலையில், வல்லம் பகுதியில் ஒடிசா மாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள குடியிருப்பில், தொடர்ந்து மொபைல் போன் திருட்டு போனது. இது குறித்து, ஒரகடம் போலீசில் புகார் அளித்ததை அடுத்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.இதில், வல்லம் பகுதியில் தங்கியுள்ள ஓடிசா இளைஞரின் மற்றொரு நண்பரான கண்டிகை பகுதியில் உள்ள சந்தன்முகப்பற்ற, 24, என்பவரை போலீசார் விசாரித்தனர்.விசாரணையில் அவர் நண்பர்களை சந்திக்க வரும் போதெல்லாம், மொபைல் போன்களை திருடி சென்று, சிபின் பேரா, 24, என்பவருடன் சேர்ந்து ஒரகடம் மற்றும் தாம்பரத்தில் உள்ள மொபைல்போன் கடைகளுக்கு விற்பனை செய்தது தெரிந்தது.அதன்படி, திருட்டு மொபைல் போன்களை விற்று தந்த, ஒரகடம் மொபைல் போன் கடை உரிமையாளர்களான சண்டனா ராம்,26, மகேஷ், 29, தாம்பரம் அலாம் நகரைச் சேர்ந்த மகேஷ், 41, உட்பட ஐந்து பேர்களை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ