| ADDED : ஆக 16, 2024 10:10 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், ஒரக்காட்டுப்பேட்டையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நேற்று நடந்தது.இம்முகாமில், ஒரக்காட்டுபேட்டை ஊராட்சி தலைவர் ராமச்சந்திரன், துணை தலைவர் நடராஜன் ஆகியோர் பங்கேற்று, ஒரக்காட்டுப்பேட்டையில் நிலவும் குறைந்த மின்னழுத்த பிரச்னையை போக்க புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும்.ஒரக்காட்டுபேட்டை தாங்கல் பகுதியில், தனிநபர் நில ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மனுக்கள் அளித்தனர்.காவிதண்டலம் ஊராட்சி தலைவர் இந்திரா, தங்களது ஊராட்சியில் சமுதாயம் கூடம் அமைக்கவும், ஒரக்காட்டுபேட்டை பாலாற்று மேம்பாலத்தில் மின்விளக்கு வசதி ஏற்படுத்த கோரியும் மனு அளித்தார். இதில், பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த முகாமில் 510 மனுக்கள் அளிக்கப்பட்டன.