ஏரியில் குப்பை கொட்டி தீ வைப்பு 5 ஆண்டுகளில் 6,000 மரங்கள் நாசம்
குன்றத்துார்:அமரம்பேட்டில் நெடுஞ்சாலையோரம் குப்பை கொட்டி தீ வைப்பதால், மரங்கள் எரிந்து நாசமாகின்றன.குன்றத்துார்-- - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில், அமரம்பேடு ஏரி உள்ளது. இந்த ஏரியின் உள்ளேயும், சாலையோரமும் உள்ள காலி நிலத்தில் வனத்துறை சார்பில், 12 ஆண்டுகளுக்கு முன் மூங்கில், நாவல் உள்ளிட்ட 10,000 மரக்கன்றுகள் நடப்பட்டன. தற்போது, 10 முதல் 15 அடிக்கு மேல் வளர்ந்துள்ளன.இந்நிலையில், ஸ்ரீபெரும்புதுார் சுற்றியுள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் தொழிற்சாலைக் கழிவுகளை, வாகனங்களில் ஏற்றி வந்து, இந்த ஏரியில் கொட்டி தீ வைக்கும் சம்பவம் தொடர்கதையாக நடந்து வருகிறது. இதனால், ஐந்து ஆண்டுகளில் 6,000த்திற்கும் மேற்பட்ட மரங்கள் எரிந்து நாசமாகிவிட்டன. கழிவுகளை கொட்டி தீ வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.