உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலை விபத்தில் வாலிபர் பலி

சாலை விபத்தில் வாலிபர் பலி

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், தென்னேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பத் மகன் சரவணன், 25; தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த அவர், நேற்று முன்தினம் இரவு, வாலாஜாபாத்திற்கு வந்துவிட்டு, இரு சக்கர வாகனம் மூலம் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.அப்போது, வாலாஜாபாத் ரயில்வே மேம்பாலம் மீது சென்றபோது, நிலை தடுமாறி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த வாலாஜாபாத் போலீசார் அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை