உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலையை கடந்தபோது பஸ் மோதி பெண் பலி

சாலையை கடந்தபோது பஸ் மோதி பெண் பலி

மதுராந்தகம், : உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் அருகே குறும்பரை கிராமத்தைச் சேர்ந்தவர் எல்லம்மாள், 65. இவர், மாமண்டூர் அருகே உள்ள தனியார் உணவக பணியாளர். நேற்று, சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், திண்டிவனம் மார்க்கத்திலிருந்து மறு மார்க்கத்திற்கு சாலையை கடந்துள்ளார். அப்போது, திருச்சியிலிருந்து சென்னை நோக்கி வந்த தனியார் சொகுசு பேருந்து, அப்பெண்ணின் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே எல்லம்மாள் பலியானார்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த படாளம் போலீசார், எல்லம்மாள் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை