உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தேர்தல் பணியை புறக்கணித்தால் நடவடிக்கை

தேர்தல் பணியை புறக்கணித்தால் நடவடிக்கை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் பணியில், 6,800 அரசு அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் பெரும்பகுதி ஆசிரியர்கள் பணியாற்ற உள்ளனர். இவர்களுக்கு தேவையான பயிற்சிகள் மூன்று கட்டமாக வழங்கப்படும். அதில், முதற்கட்ட பயிற்சி, நாளை மறுதினம் துவங்குகிறது. ஆலந்துாரில் உள்ள புனித மான்போர்ட் பள்ளி, ஸ்ரீபெரும்புதுார் ஸ்ரீவெங்கடேஸ்வரா பொறியியல் கல்லுாரி, காஞ்சிபுரம் பாரதிதாசன் மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம் எஸ்.எஸ்.கே.வி., பள்ளி ஆகிய நான்கு இடங்களில் இப்பயிற்சி நடக்க உள்ளது.ஓட்டுச்சாவடி பணிக்கு உத்தரவிட்ட அரசு அலுவலர்கள் தேர்தல் பணியை புறக்கணித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி எச்சரிக்கை விடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை