| ADDED : ஆக 11, 2024 02:12 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் செவிலிமேடு - புஞ்சையரசந்தாங்கல் இடையே பாலாற்றில் கூடுதல் மேம்பாலம் கட்ட வேண்டும் என, அய்யங்கார்குளம் உழவர் பயிற்சி நிலையம், உழவர் ஆய்வுமன்ற அமைப்பாளர் சிவகுமார், காஞ்சிபுரம் கலெக்டரிடம் அளித்த மனு விபரம்:காஞ்சிபுரம் செவிலிமேடு - புஞ்சையரசந்தாங்கல் இடையே பாலாறு உயர்மட்ட பாலம் உள்ளது.தற்போது, இச்சாலையில் கனரக வாகனங்கள் அதிகம் செல்வதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.பாலத்தில் வாகனம் ஏதாவது பழுதானால்,3 கி.மீ., துாரத்திற்கு வாகனங்ள் அணிவகுத்து நிற்கும் நிலை உள்ளது. கடந்த 1ம் தேதி பாலத்தில் விபத்து ஏற்பட்டதால் நீண்டநேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. எனவே, செவிலிமேடு பாலாறு உயர்மட்ட பாலம் அருகில், கூடுதலாக ஒரு மேம்பாலம் அமைத்தால், இரு வழிபோக்குவரத்துக்கு தனித்தனியாகவழி கிடைக்கும்.எனவே, செவிலிமேடு - புஞ்சையரசந்தாங்கல் இடையே பாலாற்றின் குறுக்கே கூடுதலாக புதிய பாலம் அமைக்க ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.